நம்மை பற்றி ஒரு சில வசனங்கள்

எமது வீரசேனை ஜெபக்குழு 
167, புதுக்கடை கொட்டாஞ்சேனை,
இலங்கை

எனும் முகவரியில் அமைந்துள்ளது. இதனை டிவைன் சென்ரர் எனவும் அழைப்பார்கள். உண்மையோடு தேவனை ஆடி, பாடி, ஸ்துதித்து, ஸ்தோத்தரித்து, அவரை அனுபவித்து மகிழும் ஒர் துதிசேனையாகும். இங்கு துதிக்கையிலே வேதனை, கவலை, துன்பம், சோர்வு யாவும் மறைந்து போகும். அத்துடன் தேவன் தனது பிள்ளைகளுக்கு பல அற்புதங்களும் அதிசயங்களும் அளிக்கும் ஓர் இடமாகும். அதுமட்டுமல்ல உண்மையாகவே பரலோக உன்னத அனுபவத்தை பெறலாம்.

உண்மையில் இவ்விடத்தையும் ஆவிக்குரிய தாய்தந்தையையும் இறைவன் நமக்குத்தந்த கொடையாகவே கருதவேண்டும். இதில் முக்கிய அம்சம் என்னவெனில், அழைக்கப்பட்ட சபையில் இருந்தவாறே கட்டப்பட்ட மக்களை கடவுளுக்குள்ளாக இரட்சிப்புக்குள் கொண்டு வருவதே ஆகும். ஆம்

தாயார் இறைவன் அடி சேர்ந்தபோதும் அவரின் வாஞ்சைக்கேற்ப அவரால் உருவாக்கப்பட்ட தேவபிள்ளைளுடன்; அப்பாவின் தலைமையின்கீழ் வெற்றிகரமாக வீரசேனை ஜெபக்குழு இயங்கி வருகிறது. இதன் குறிக்கோள:- ஆத்தும ஆதாயம், தேவனின் இரண்டாம் வருகைக்கு நம்மை தயார்செய்தல், பிறருடைய தேவைகளுக்காக போராடி ஜெபித்து விடுதலை பெற்றுக்கொடுத்தல்.

இங்கு சில சேவைகள் வழங்கப்படுகின்றது:

விண்ணப்பங்களுக்காக ஜெபித்தல். 
சிறுவர்களுக்கு மறை அறிவைப் புகட்டுதல். 
வேதாகம வகுப்புக்களை நடாத்துதல். 
வீட்டுக்கூட்டங்கள் நடாத்துதல். 
புதன், வெள்ளி கிழமைகளில் 8மணி முல் 11மணி வரை கூட்டங்கள் நடாத்துதல்.

ஆம் நண்பனெ!

உனக்கு பரலோகத்தை காண ஆசையா? உனக்கு விடுதலை வேண்டுமா? இதோ இங்கே வா! உனக்காக ஓர் குட்டிப்பரலோகம் காத்திருக்கிறது.

VIIRASEENAI PRAYER GROUP
107, NEWCHETI ROAD
COLOMBO 13
SRI LANKA

நம்மயேசுப்பத்திரிகை.

 

இவ் இணையம் பற்றிய உங்களது கருத்துக்களை நம்முடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.   

 


ஜெப வேண்டுதல்.

நண்பர்களே!

உங்கள் ஜெப விண்ணப்பங்களுக்காக இங்கு ஜெபிக்கப்படும். கீழ் காணும் முகவரிக்கு உங்கள் விண்ணப்பங்களை அனுப்பி வையுங்கள். அனுப்புவதோடு மட்டுமல்ல எபிரேயர் 11:1-2 ல் சொல்லப்பட்டது போல நம்பிக்கையுடன் இருங்கள்.

எபிரே 11:1-2: நம்பிக்கை என்பது நாம் எதிர்நோக்கி இருப்பவை கிடைக்கும் என்னும் உறுதி. கண்ணுக்கு புலப்படாதனை பற்றிய ஜயமற்ற நிலை.

 

About Us      Good News      Activity      Contact Us      Witness      Home
Design by Alan Navaratnam, Sillalai, Sri Lanka