நண்பர்களே!

நீங்கள் பெற்ற இறை அனுபவங்களை.  நன்மைகளை இறை நாமம் மகிமை அடையும் வகையிவ் பிறருடன் பகிர்ந்து சாட்சியாய் விளங்குங்கள்.  கீழ் காணும் முகவரிக்கு சாட்சிகளை அனுப்பி வையுங்கள்.

WEERASENI JABAKULU
107, NEWCHETI ROAD
COLOMBO 13.
SRI LANKA.


உரையாடல்

கமலா: என்ன ஒரே பைபிள் கூட்டம் கூட்டம் என்று பைபிளும் கையுமாய் திரிகிறீராம்

விமலா: ஆமா கமலா நீரும் வாருமேன் உண்மையாகவே உமக்கு ஆசீர்வாதம்; கிடைக்கும்.

கமலா: எனக்கு இவற்றில் எல்லாம் நம்பிக்கையில்லை.

விமலா: சமய பாடத்தில் 100 புள்ளி எடுக்கும் நீரா இப்படிக்கூறுகிறீர் எனக்கு வியப்பாக உள்ளது.

கமலா: அதற்காக என்னை நாஸ்தீகன் ஆக்கிவிடாதேயும். ஏன் கூட்டங்களுக்கு வரத்தான் வேண்டுமா? நான் கோவிலுக்குப்போகிறேன் நற்கருணையெடுக்கிறேன். அது போதாதா?

விமலா: அது நல்லது தான். ஆனால் எத்தனை தடைவ நற்கருணையை ஆயத்தத்துடன் உண்டிருக்கிறோம். சமாதானம் சொல்லுகிறோம் இயேசு கற்பித்த செபத்தைச்சொல்கிறோம் ஆனால்; எத்தனையோபேரை மன்னியாமல் இருக்கிறோம். எல்லாவற்றையும் கடமைக்கெனச்செய்கிறோம் உள்ளத்தால் உணர்ந்து செய்வதில்லை. இதில் என்ன அர்த்தம் இருக்கிறது.

கமலா: என்ன கூட்டங்களுக்கு வந்தால் உண்மையோடு இவற்றைச்செய்யலாம் என்கிறீரா?

விமலா: ஆரம்பத்தில் பொழுதுபோக்காகத்தான் எல்லாவற்றையும் செய்தேன் ஆனால் கூட்டங்களுக்குச்சென்ற பின் உண்மையோடு அப்பா என அழைக்கமுடிந்தது. அவரை சுவைக்கக்கூடியதாயிருந்தது. பைபிளில் உள்ள வசனப்படி நடக்கிறோமா? என கேள்வியும் எழுந்தது.

கமலா: சரி உமது கரைச்சலின்பெரில் வருகிறேன்.

விமலா: நல்லது அடுத்து இரண்டு மூன்று தடைவ வந்தால்தான் தேவனை சுவைக்க முடியும். வாரும் போகலாம.;

கமலா: ஆ இந்த இடமா மிகக்கிட்ட.

விமலா: எப்படிக்கூட்டம் இருந்தது?

கமலா: ஓரளவு பிடித்தது. மனதுக்கு ஆறுதலாக இருந்தது. ஆனா என்னவோ விளங்காத பாஷையில் கத்தினம் டாண்ஸ் ஆடினம் எனக்கு புரியல்ல.

விமலா: அது பரிசுத்தஆவியின் கொடையாகிய அன்னியபாஷை அவர்கள் தம்மைமறந்து குதுகலமாக ஆடிப்பாடி தேவனைத் துதிப்பார்கள்.

நீரும் இவ்வனுபவத்தை போகப்போகப்பெறுவீர். நாம் வாஞ்சித்துக்கேட்பும்போது நமக்கும் கொடுப்பார்.


(1 மாதத்தின் பின்)

கமலா: விமலா உண்மையாகவே நானும் இறைவனை சுவைத்தேன். தேவன் என்னுடன் கூடஇருப்பதை நான் உணருகின்றேன். முந்திய நாட்களில் நான் நினைப்பேன,; இவர்களுக்கு வேறு வேலை இல்லை தாம்போய் நேரத்தை வீணடிப்பது பத்தாது மற்றவர்களையும் வரச்சொல்கிறார்களே என்று. ஆனால் இனிமேல் நானும் என் நண்பர்களுக்கு இதன் மகத்துவத்தைச்சொல்லி அவர்களையும் கூட்டிவருவேன்.

(உரையாடலாக ஒரு சாட்சி)

VIIRASEENAI PRAYER GROUP
107, NEWCHETI ROAD
COLOMBO 13

SRI LANKA

நம்மயேசுப்பத்திரிகை.

 

இவ் இணையம் பற்றிய உங்களது கருத்துக்களை நம்முடன் பகிர்ந்து கொள்ளுங்கள். 

 

About Us      Good News      Activity      Contact Us      Witness      Home
Design by Alan Navaratnam, Sillalai, Sri Lanka